கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை – நிர்மாணப் பணிகளை பிரதமர் மேற்பார்வை

கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை

பொலன்னறுவ கதுருவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மும்மொழி தேசிய பாடசாலையின் தற்போதைய நிலையை ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை நேற்று மாலை (14) பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேற்கொண்டிருந்தார்.

இப்பாடசாலை இந்திய அரசியல் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்காெண்டிருந்தார்.

வலயத்தின் அனைத்து இன, மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிள்ளைகளுக்கும் கல்வியை பெறுவதற்கான வசதியை நோக்கமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் இந்தப் பாடசாலையின் நிர்மாணிப்பணிகள் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

நிர்மாணம் முடிவடையும் போது சுமார் 1600 மாணவர்கள் கல்வி பயிலக் கூடிய வசதிகள் உருவாகும் என்றும் இப்பாடசாலையில் விசேட கல்வி பிரிவு, மொழி வகுப்பறை, e-learning வகுப்பறை, விடுதி, நிர்வாக கட்டடம், ஆய்வுகூட வசதிகள், அடிப்படை வசதிகள் உட்பட ஆசிரியர் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நிர்மாணப் பணிகள் மந்த கதியில் இடம்பெறுவதாக பிரதமரிடம் சுட்டிக் காட்டப்பட்டது. இவ்விஜயத்தில் பிரதமருடன் வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பீ.சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *