சாதாரண தர விஞ்ஞான வினாத் தாள் குறித்து வதந்தியை நம்ப வேண்டாம்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியான அறிவிப்பு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி அறிவிப்பின் படி,
இந்த ஆண்டு விஞ்ஞானப் பாட வினாத்தாள் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கேள்வி முறை மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக விஞ்ஞானப் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் 08 மேலதிகப் புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு பெறுபேற்றுக்கும் (ஏ,பி, சி) 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் ஏ சித்தி உண்டு.
இது முழுமையாக புனையப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது பரீட்சைகள் திணைக்களம் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் இணைய இணையத்தளங்களுக்கு மட்டுமே செய்தி வெளியீடுகளை வெளியிடும் என கல்வி அமைச்சு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பில் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் மற்றும் முறையான கண்காணிப்பின் பின்னர் உரிய அதிகாரியின் கையொப்பத்துடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.
எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
One Comment on “சாதாரண தர விஞ்ஞான வினாத் தாள் குறித்து வதந்தியை நம்ப வேண்டாம்.”