பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

மாணவர்களுக்கு  உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்கள் அல்லது வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.

இந்த திருத்த சட்டமூலம் சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சட்டமூலம் பாராளுமன்றில் அனுமதிக்கப்பட்டால் அதிபர்கள் ஆசிரியர்கள் ஒழுக்காற்றுக் குழுக்களில் இருந்து விலகுவதாகவும்  தொடர்ந்தும் பாடசாலைகளில் ஒழுக்க விடங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனில் அது தொடர்பாக வழிகாட்டல்கள் வழங்க வேண்டும் எனவும்  கல்வித் துறையைச் சார்ந்தோர்  முன்வைத்துள்ள கோரிக்கையை அடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *