2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு.
2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மிக விரைவில் வௌியிடப்படும் என பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறுகளை வௌியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடு முழுவதிலும் இருந்து 307,951 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெறுபேறுகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பெறுபேறுகள் வௌியிடப்படும் திகதி மற்றும் நேரம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் பரீட்சை திணைக்களத்தால் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
