பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணமான, தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதனால், இந்த நீதித்துறை நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்பட்டு, பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தேவையான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, தேவைக்கேற்ப பிற பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதோடு, ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பை திருத்துவதற்கும், அதை நீட்டிப்பதற்கும், தற்போது உள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கும் இந்த கலந்துரையாடலின் போது ஒப்புதல் எட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *