வைத்தியர்களின் கட்டாய ஓய்வூதிய வயது அதிகரிப்பு

சகல அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய விசேட வைத்தியர்கள், தரப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள், பல் மருத்து அதிகாரிகள், அனைத்து வைத்திய நிர்வாக அதிகாரிகள், பல் வைத்திய நிபுணர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் ஆகியோரின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *