கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது அரசின் பிரதான இலக்கு – பிரதமர்

கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது அரசின் பிரதான இலக்கு - பிரதமர்

தேசிய கல்வியியல் கல்லூரிகள்  மூலம் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 ஆண்டுகளில் மாற்றமடையவில்லை என்றும், ஆசிரியர்களின் தொழில்முறைத் திறனை வளர்த்துக் கொள்வதோடு, நவீன கல்வி அறிவையும் அவர்களுக்கு வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக்கூட அமைப்பில் ஆசிரியர் பயிற்சி கல்வி 15 ஆண்டுகளில் மாற்றமடையவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புலதிசிபுர தேசிய கல்வியியல் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் புளதிசிபுராவில் நடைபெற்ற “புளதிசிபுரம் இளமையானது” கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் அரசு கல்விக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டில் கொண்டு வர வேண்டிய மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியில் தரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்கள் ப்லாஸ்டர் ஒட்டி பொருத்தி மேற்காெள்ளக் கூடிய அணுகுமுறை அல்ல, மாறாக தரமான, மனிதாபிமானமுள்ள மற்றும் நவீன உலகை வெல்லும் திறன் கொண்ட தனிநபர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தம் என்றும் பிரதமர் கூறினார்.

புலதிசிபுர கல்வியியல் கல்லூரியின் சின்னம் பொறிக்கப்பட்ட பலகையை கலாநிதி ஹரிணி அமரசூரிய திறந்து வைத்து, கல்லூரி வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டார். 2000 முதல் 2025 வரை அங்கு பணியாற்றிய பீடாதிபதிகள் உட்பட முழு ஊழியர்களும் பாராட்டப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *