2015 ஆம் ஆண்டு கம்பஹா பிரதான பாடசாலை ஒன்றில் தரம் 5 க்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதில் முறைகேடாக நடந்த கொண்ட அதிபர் ஒருவருக்கு நீதிமன்றினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இந்த அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மாகாணக் கல்விப் பணிப்பாளரின் முறையான அங்கீகாரம் இன்றி, பிரபல பாடசாலையில் சேர்க்கும் நோக்கில் மாணவனை தனது கல்லூரியில் சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது குறித்த அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில், மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
நடுத்தர வர்க்க மக்களின் பிள்ளைகளுக்கு உள்ள புலமைப் பரிசில் பரீட்சை போன்ற போட்டிகளின் படி கிகைடகும் வாய்ப்பை தட்டிப் பறித்து முறைகேடாக இன்னுமொருவருக்கு வழங்குவது ஈடுசெய்ய முடியாதது எனவுமு் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அமைப்பில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க சமூகத்திற்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய தண்டனையை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இவற்றைப் பரிசீலித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிபருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
அதற்காக பதவி இடைநிறுத்த உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.
மேலதிக தண்டனையாக ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்ததுடன், அதனை செலுத்த தவறினால் 03 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்தார்
