அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், கலாநிதி ஹரினி அமரசூரிய, பாடசாலைகளுக்கு அரசியல் வாதிகளை அனுமதிப்பது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
எனினும் இதற்கு முன்னர், பாடசாலைகளுக்கு அரசியல் வாதிகளை அழைப்பதை தடைசெய்வதாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.
இந்த பின்னணியில், இணைய உலகில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இதனை அடுத்து இந்த கருத்தை கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
