இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரியில் 2026 கல்வியாண்டுக்கான அனுமதிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 2025 மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரை இலங்கை பரீட்சைத் தளமான www.doenets.lk இல் “Online Applications – Recruitment Exam/EB Exam” எனும் பிரிவின் கீழ் வழங்கப்படும்.

விண்ணப்பத் தகுதிகள்:

  1. விண்ணப்பதாரர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பிக்கும் போது 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் (16-04-2008 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்).
  3. க.பொ.த  உயர்தரம் அல்லது ஐக்கிய இராச்சியத்தின் உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. ஆங்கிலம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பரீட்சை விவரங்கள்:
பரீட்சை நான்கு பகுதிகளாக நடத்தப்படும்:

  1. பொது அறிவு (1 மணி நேரம்)
  2. நுண்ணறிவு (1 மணி நேரம்)
  3. ஆங்கில மொழித் திறன் (1½ மணி நேரம்)
  4. சிங்களம் அல்லது தமிழ் மொழித் திறன் (1½ மணி நேரம்)

விண்ணப்பதாரர்கள் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு பரீட்சைகளை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ.1200/- ஆகும். இந்தக் கட்டணம் ஆன்லைன் மூலம் எந்த வங்கி டெபிட் கார்டு, இலங்கை வங்கி ஒன்லைன் வங்கி முறை அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளை மூலமாகவும் செலுத்தலாம்.

முக்கிய குறிப்புகள்:

  • விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • பரீட்சைக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.
  • பரீட்சை அனுமதி அட்டைகள் ஒன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும்.
  • முழு விபரங்களுக்கு – இங்கே க்லிக் செய்யவும்
  • விண்ணப்பிக்க – இங்கே க்லிக் செய்யவும் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *