அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் 15921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வெற்றிடங்களில் பல பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கல்வித் துறையில் வெற்றிடங்களுக்கு ஏற்ப முறையான முறைமையின் படி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார்