தேசிய அடையாள அட்டையின் (NIC) விவரங்களை உறுதிப்படுத்தும் கடிதங்களைப் பற்றிய விசேட அறிவித்தல் ஒன்றை ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது 2025 மார்ச் 17 முதல் ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) எழுதும் மாணவர்களுக்கானதாகும்.
இன்னும் உறுதிப்படுத்தல் கடிதங்களை பெறாதவர்கள் உத்தியோபூர்வ இணையத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், ஒன்லைனில் அணுக முடியாதவர்களுக்கு நேரில் பெற்றுக்கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள்
இந்த பணிக்காக மார்ச் 15, 2025, சனிக்கிழமை, காலை 8:30 முதல் மதியம் 12:30 வரை, ஆட்களை பதிவு செய்தவற்கான திணைக்களம் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாகாண அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள்
இந்த ஆண்டு O/L பரீட்சை எழுத உள்ள பாடசாலை மாணவர்கள், இன்னும் NIC விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள், தங்கள் பாடசாலை அதிபர் அல்லது கிராம சேவையாளர் சான்றளித்த முழுமையான விண்ணப்பப் படிவங்களை கொண்டு வர வேண்டும்.
NIC உறுதிப்படுத்தல் கடிதத்தை ஒன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆட்களை பதிவு செய்தவற்கான திணைக்களம்இ அனைத்து O/L மாணவர்களும் தங்கள் NIC உறுதிப்படுத்தல் கடிதங்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது, இதனால் அவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பரீட்சையில் கலந்து கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.
