கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் அடிப்படையிலே கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற டிப்ளமோ ஆசிரியர்கள் நாலாயிரம் பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வி அமைச்சுக்கு 11 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதியினூடாக பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வதோடு, நீண்டகாலமா இடைநிறுத்தப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் புனரமைக்கப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
