பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  நேற்று (07) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பாடசாலைகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்தால், உடனடி விசாரணை நடத்தப்படும்.
  • கல்வித்துறையில் நிலவும் நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தப்படாததும், அரசியல் தலையீடுகளுமே முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்தார்.
  • ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது, ஆசிரியர் இடமாற்றங்களை சீரமைப்பது, அதிபர் நியமனங்களில் உள்ள சிக்கல்கள், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • கல்வி நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
  • கல்வித்துறையில் நிலவும் பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *