பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் பின்னர் வெளியாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
331185 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.