அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிக்கான 2025 வருடத்திற்கான இணைப்பு சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாடசாலை மட்டப் போட்டிகள் மார் 14 ஆம் திகதிக்கு முன்னரும், வலய மட்டப் போட்டடிகள் மே 09 ஆம் திகதிக்கு முன்னரும், ஜ{லை 7 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண மட்டப் போட்டிகளையும் நடாத்துமாறு கல்வி அமைச்சு சுற்றுநிருபத்தில் தெரிவித்து்ள்ளது.
அத்தோடு, தேசிய மட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜீலை 31 க்கு முன்னர் கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிகள் யாவும் 2025.09.20, 21 மற்றும் 2025.09.27, 28 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
