ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க இணக்கம்

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கயை 35 ஆகக் குறைக்க இணக்கம்

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க இணக்கம்

ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை முப்பத்தைந்தாக குறைக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர்- அதிபர்கள் ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார்.

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த உடன்பாட்டை தெரிவித்துள்ளார்..

அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பில், கொழும்பு பிராந்திய பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பிலான தகவல்களையும் முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்தக் கலந்துரையாடலில் தகவல்களை முன்வைத்துள்ளார்.

இந்த ஆண்டு, ஒரு வகுப்பில் ஐந்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட இருபத்தி இரண்டு பாடசாலைகளும், ஒரு வகுப்பில் ஆறு முதல் பத்து மாணவர்களைச் சேர்ந்த இருபத்தைந்து பாடசாலைகளும், இருபதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஐம்பது பாடசாலைகளும் இருப்பதாக  செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை முப்பத்தைந்தாகக் கட்டுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறான நிலையில் இருந்தால், பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உண்மைகளை வழங்கிய பின்னர் பிரேரணையை பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *