ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வித் திணைக்களம் அறித்துள்ளது.
வடமாகாண ஆசிரிய இடமாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திகதியை பிற்போடுவதாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இடமாற்ற தீர்மானங்கள் அமுலாகும் புதிய திகதிகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.