தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு
அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் மொழி பேசுவோர் அதிகமாக உள்ள மாவட்டங்கள் இறுதி இடங்களைப் பெற்றுள்ளன.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையிலான பகுப்பாய்வு அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டது.
இதன்படி, இரு வினாப்பத்திரங்களிலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் பட்டிலில் குருணாகல் மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தை ஹம்பாந்தோட்டை பெற்றுள்ள அதே வேளை கேகாலலை மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் இறுதி இடங்கள் எட்டு இடங்களையும் தமிழ் மொழி பேசுவோர் அதிகம் வாழும் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
25 ஆம் இடத்தை திருகோணமலையும். 24 ஆம் இடத்தை மன்னாரும், 23 ஆம் இடத்தை மட்டக்களப்பும், 22 ஆம் இடத்தை புத்தளமும், 21 ஆம் இடத்தை முல்லைத்தீவும், 20 ஆம் இடத்தை வவுனியாவும், 19 ஆம் இடத்தை கிளிநொச்சியும், 18 ஆம் இடத்தை நுவரெலியாவும், 17 ஆம் இடத்தை யாழ்ப்பாணமும் பெற்றுள்ளன.
முழுமையான அறிக்கை பின்வரும் இணைப்பில்

