கடந்த 10 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நியமனத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியிருந்தார்.
தன்னால் நிறைவேற்ற வேண்டிய முன்னுரிமைப்படுத்த வேண்டிய சமயப் பணிகளைக் காரணம் காட்டி அவர் இப்பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
தான் பதவி ஏற்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாவதை தான் விரும்பவில்லை எனவும் அவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
