தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில் 

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில் 

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில்

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் அடுத்த வாரமளவில் வெளியாகும் என தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட காலமாக நடைபெறாதிருந்த நிறுவன சபை மற்றும் கல்வி விவகார சபைகளுக்கான நியமனங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்டதன் பின்னணியில் இச்சபைகள் கூடி தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இப்பின்னணியில் தேசிய கல்வியியல் கல்லூரி இறுதிப் பெறுபேற்றுக்கு கிடைக்க வேண்டிய அனுமதிகள் அடுத்த வாரமளவில் கிடைக்கும் என தெரிய வருகிறது.

இதனையடுத்து, தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரி நியமனங்களை விரைவில் வழங்குதற்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறே, கல்விமுதுமாணி இறுதிப்பரீட்சை பெறுபேறு, பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் இரண்டாவது பருவத்திற்கான பரீட்சைப் பெறுபேறுகள் என்பனவும்  அடுத்த வாரமளவில் வெளியாகும் என அனுமானிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *