3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்
கல்வி அமைச்சு 3,987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்காெண்டுள்ளது. அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 6 முதல் தரம் 11 வரையிலான பாடங்களைக் கற்பிக்க இவ்வாறு நியமனம் பெறும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளின் படி ஆசிரியர் நியமனங்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்யவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன் படி நியமனங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.