அரச சேவை அல்லது ஆசிரியர் பணிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் குறை ஊதிய பட்டதாரிகள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நியாயமான தீர்வை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழு துரிதமாக செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
