அனைத்து மாகாண செயலளர்களுக்கும்
இலங்கை ஆசிரியர் சேவை – தடைதாண்டல் சலுகை வழங்கல் தொடர்பாக
இது தொடர்பான எனது 2025.02.17 ஆம் திகதி கொண்ட அறிவித்தலுக்கு மேலதிகமானது
02. அந்த கடிதத்தின் மூலுமு் இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய வினைத்திறன் தடைதாண்டல் முறைமை 2025.07.01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் வரை இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் தற்போது காணப்படும் தடைதாண்டல் தொடர்பான மொடியுல்களை பூரணப்படுத்துவற்கு 2025.06.31 வரை பொது சலுகைக் காணலம் வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழு மூலம் வழங்கப்பட்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
03. அதற்கேற்ப, தடைதாண்டல் பூரணப்படுத்த வேண்டிய திகதி கடந்துள்ள ஆனால் இப்போது அதனை பூரணப்படுத்தியுள்ள அல்லது 2025.06.30 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தும் ஆசிரியர்களை அந்த தடைதாண்டலுக்கு உரிய திகதியில் பூரணப்படுத்தியவர்களாக கருதப்பட முடியும் என்பதோடு, சம்பள ஏற்ற தடைப்படாமல் அவர்களுக்கு உரிய திகதியில் பதவி உயர்வை வழங்குவதற்கு முடியும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.
ஏ.ஜே.எஸ்.எஸ்.எதிரிசூரிய
மேலதிக செயலாளர்
செயலாளருக்காக
