சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்
இம்முறை க.பொ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அவர்களது முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் ஏதேனும் திருத்தம் செய்வது அவசியமானால் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தில் அதே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அந்த வசதிகளை WWW.DONETS.LK இணையதளத்திற்குச் சென்று பெறலாம்.
இதேவேளை, மாணவர்களின் பரீட்சைச் அனுமதி அட்டைகளை விரைவில் வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றுபவர்களின் எண்ணிக்கை 474,147 ஆகும். 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3663 மையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
