அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் முதலாவது பகுதி ஏப்ரல் மாத சம்பளத்தோடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவ்வாறே மொத்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பு 2027 ஆம் ஆண்டு அதிகரிப்பினும், அந்த வருடத்தில் கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்திற்கு உரியவை இந்த வருட ஏப்ரல் முதல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்த சம்பள அதிகரிப்புக்கு நாம் 325 பில்லியன் ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு, இவ்வருடம் 110 பில்லியன் ரூபா செலவிட எதிர்பார்க்கிறோம். அடிப்படைச் சம்பள அதிகரிப்பு இடம்பெற்றால் அது மொத்தச் சம்பளத்தில் எவ்வாறு பாதிப்புச் செலுத்தும் என்பது தொடர்பாக அரச ஊழியர்கள் அறிவார்கள். அரச ஊழியர்கள் இந்த அதிகரிப்பை அன்போடு ஏற்றிருக்கிறார்கள். அவர்களின் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
யாருடைய சம்பளமும் குறைவடைய மாட்டாது. அடிப்படைச் சம்பளத்திற்கு ஏற்றாற் போல, வரி, மேலதிக கொடுப்பனவு, முதலானவை தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தினூடாக அனைத்தையும் அதிகரிக்க முனைந்துள்ளது என்றார்.
2026 ஜனவரியில் அடுத்த சம்பள அதிகரிப்பும், 2027 ஜனவரியில் இறுதி அதிகரிப்பும் சம்பளத்தோடு சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
