சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கவுள்ள சிவராத்திரி தினத்தை அடுத்து 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பகரமாக சனிக்கிழமை பாடசாலை நடாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
