ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் முதல் 10 இடத்திற்குள் – பிரதமர்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் முதல் 10 இடங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்புடன் சம்பள தரங்களில் 07ம் இடம் அதிபர்களுக்கும் 08ம் இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

“முதல் 10 இடத்திற்கு ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக உறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதிபர் சம்பளம் 30,105 ரூபாவினாலும் ஆசிரியர் சம்பளம் 25 ஆயிரத்து 360 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது  என்றும் கல்வி அபிவிருத்திக்காக 6,019 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *