இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின் விகாராதிபதியாவவும் அகில இலங்கை சாசனபாதுகாப்பு சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அவ்வாறே ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தெனிகே ஆனந்த தேரர், கரகஸ்வெவ ஆனந்த தேரர், விதாரந்தெனியே நந்த தேரர் உள்ளிட்ட பிக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
