இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பொருட்களின் விலை, தொலைபேசி கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
