கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச சேவையில் நியமனம் வழங்குவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார்.

போட்டிப் பரீட்சையின் மூலம் இவ்வாறு நியமனங்களை வழங்குதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளை பணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று தொழில் கோரும் பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இடம்பெற்ற போதே இதனை அவர் தெரிவித்தார்.

இதன்போது தொழில் கோரும் பட்டதாரிகள் ஆளுனரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். போட்டிப்  பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்படும் எனவும் ஆளுனர் இதன் போது தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *