கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதலாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்காக சமார் 16,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன் 1,066 மதிப்பீட்டு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.