தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த விண்ணப்பம் பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் தரம் 05 இல் கல்வி பயின்ற பாடசாலை அதிபரிடம் விண்ணப்பம் பெற்று உரிய முறையில் பெற்றோரால் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பாடசாலை அதிபரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் விண்ணப்பங்களை 25.03.2025 க்கு முன் ஒன்லைனில் அனுப்ப வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.