தரம் 6 இற்கு மாணவர் இணைக்கும் விண்ணப்பம் டிசம்பர் 12 வரை நீடிப்பு

தரம் 6 இற்கு மாணவர் இணைக்கும் விண்ணப்பம் டிசம்பர் 12 வரை நீடிப்பு

புலமைப்பரிசில் மூலம் பாடசாலைகளுக்கு தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் விண்ணப்ப முடிவுத் திகதி டிசம்பர் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளதாவது,

‘2025 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகள் மாற்றமடைந்த மாணவர்களிடமிருந்து பாடசாலைகளில் தரம் 6 இற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று அதிபர்கள், அவற்றை நிகழ்நிலை முறைமையினுள் உள்ளீடு செய்யும் பணிகள் 2025.11.26ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

2025.12.05ஆம் திகதியன்று நிகழ்நிலை மூலமாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி என்றாலும், தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக குறித்த இறுதித் திகதி 2025.12.12ஆம் திகதியாக திருத்தம் செய்யப்படுகின்றது என்பதை அறியத் தருகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *