நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்கு மேலதிகததி வகுப்புகள், மற்றும் இது தொடர்பான ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் தலைமையகம் – 0112421111
காவல்துறை அவசர எண் – 119
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – 1911
பாடசாலை பரீட்சை ஒழுங்க அமைப்பு மற்றும் முடிவுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்காக நடத்தப்படும் அனைத்து பயிற்றுவிப்பு வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான பகிர்வுகள் போன்றவை மார்ச் 11 நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் கடந்த 7ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
