தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர்
சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காகக் காணப்படும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப, தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் டிப்ளோமாதாரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மார்ச் 2025 இல் தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து கற்பித்தல் டிப்ளோமா பெற்று வெளியேறுபவர்களுக்கு குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை ஒதுக்கப்பட வேண்டியிருந்ததால், மே 25, 2019 அன்று நடைபெற்ற போட்டித் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், தர்மாச்சார்ய சித்திபெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிடம் இந்த ஆட்சேர்ப்பு குறித்து ஆலோசனை கோரியதாகவும் பிரதமர் கூறினார்.
ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கும் ஆலோசனையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. திலித் ஜெயவீர 27 (2) இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதும், அமைச்சர்கள் அறிவிப்புகளை அறிவிக்கும் போதும் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
2019 ஆம் ஆண்டு தர்மாச்சாரிய சித்திடையந்து ஆசிரியர் சேவையில் இணைவதற்காக போட்டிப் பரீட்சை நடத்தப்பட்ட போதிலும், கோவிட் காரணமாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
தேசியப் பாடசாலைகளில் 2652 ஆசிரியர் வெற்றிடங்களும், மாகாணப் பாடசாலைகளில் 40,621 ஆசிரியர் வெற்றிடங்களும் இருப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
