கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு – 2020(2023)

கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு - 2020(2023)

கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு – 2020(2023)

10.06.2024 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிராம உத்தயோகத்தர் காலாண்டுப் பயிற்சிக்காக சமூகமளிக்காத மற்றும் பயிற்சிக் காலத்தில் பயிற்சியிலிருந்து வெளியேறிய பயிற்சியாளர்களுக்குப் பதிலாக கிராம உத்தயோகத்தர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

மேற்படி ஆட்சேர்ப்பின் கீழ் 10.06.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கு வழங்கப்பட்ட பயிற்சி நியமனங்களில் அந் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததாலும் மற்றும் பயிற்சியின் போது பயிற்சியை விட்டு வெளியேறியதாலும் நிரப்பப்பட முடியாத கிராம உத்தயோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய பயிற்சியாளர்களை கிராம உத்தயோகத்தர் காலாண்டு பயிற்சிக்காக அழைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுளதோடு அதற்காக பகிரங் சேவை ஆணைக்குழுவின் PSC/EST/03-03/02/2021 சம இலக்க மற்றும் 29.01.2025 ஆம் திகதி கடித்தின் மூலம் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

02. அதன்படி, 02.12.2023 ஆம் திகதி நடைபெற்ற 2020 (2023) கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில், அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவின் முன்னுரிமைப் பட்டியலின்படி பயிற்சிக்கு அழைக்கப்பட எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன். (இணைப்பு 01)

03. மேலும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட புதிய பயிற்சியாளர்களுக்கான கிராம உத்தயோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறையின்படி நடாத்தப்படும் காலாண்டு பயிற்சித் திட்டம் 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும், இந்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 24.02.2025 ஆம் திகதிக்கு குறித்த மாவட்டச் செயலகத்தில் அறிக்கையிட வேண்டும் என்பதையும் மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

04. இணைப்பு 01 இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தகைமை பெற்ற கிராம உத்தயோகத்தர் பயிற்சியாளர்களுக்கு தற்போது பயிற்சி நியமனக் கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

பட்டியல் மற்றும் மேலதிக விபரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *