அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில்
அரச சேவையின் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் தீர்மானம் அடிப்படையில் அரச முகாமைத்துவ சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு இரண்டு திறந்த போட்டிப் பரீட்சைக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நிலவிய வெற்றிடங்களுக்கு ஏற்ப 2021 இல் கோரப்பட்ட விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019 முதல் இன்று விரை நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய விண்ணப்பங்களைக் கோருவதற்கும் அதனடிப்படையில் பரீட்சையை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில் 3000 பேரும், புதிய விண்ணப்பத்தின் அடிப்படையில் ஏனையோரையும் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2019 இன் பின்னர் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஒரே தடவையில் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டவர்களுக:கும் பரீட்சையை நடாத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளதாக அறிய முடிகிறது.
