அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், மாலை மற்றும் இரவில் இலவச மேலதிக வகுப்புகளை நடத்தும் திட்டத்தை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

வடமத்திய மாகாண ஆளுநர் திரு. வசந்த ஜினதாச அவர்களின் யோசனையின் அடிப்படையில், மாகாண ஆளுநர் அலுவலகம், அனுராதபுரம் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இந்த திட்டத்திற்கு ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பங்களிப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இதற்கு அவர்கள் எதுவும் கட்டணம் கோரவில்லை.

அனுராதபுரத்தில் உள்ள மகாபுலங்குளம் மகா வித்தியாலயத்தில் இரவு நேரங்களில் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச நேற்று (12) ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் அனுராதபுரம் வலயக் கல்விப் பணிப்பாளர் மகேஷி மஞ்சரிகா ஹெட்டியாராச்சி, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி அசேல விஜேசிங்க, மஹாபுலங்குளம் மகா வித்தியாலய அதிபர் டொரிங்டன் குமாரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *