கற்றல் பாங்குகள் Learning Style – பிளெமிங் மற்றும் மில்ஸ்

கற்றல் பாங்குகள் Learning Style – பிளெமிங் மற்றும் மில்ஸ்

காட்சிப்படுத்தல் (Visual) செவிமடுத்தல் (Auditory), வாசித்தல் – எழுதுதல் (Reading & Writing), அனுபவம் ஊடாகக் கற்றல் (Kinesthetic) என்பனவற்றின் முதலெழுத்துக்களின் சுருக்கமே வார்க் எனப்படும். பிளெமிங் மற்றும் மில்ஸ் (1992) என்பவர்கள், கற்கும் பாங்குகள் தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இந்நான்கு வகையான கற்றல்களை வகைப்படுத்தினர்.

VARK மாதிரி என்பது, மாணவர்களின் வெவ்வேறு கற்றல் விருப்பங்களை (Learning Preferences) விவரிக்கும் நான்கு வகையான உணர்வூ வழிமுறைகளைக் (Sensory Modalities)  குறிக்கிறது. இம்மாதிரி, மாணவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்கிறார்கள் என்பதை இவ்வழிமுறைகள் பிரதிபலிக்கின்றன எனக் கூறுகின்றது.

Visuals (V) காட்சிப்படுத்தல்
இப்பாங்கு, தகவல்களைக் காண்பிப்பதற்கு அட்டவணை, வரைபுகள், பாய்ச்சல் முறை, செயன்முறை அட்டவணை, அனைத்து குறியீட்டு அம்புக்குறிகள், வட்டங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

Auditory (A) செவிமடுத்தல், பேசுதல் 
செவிமடுத்தல் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இக்கற்றல் பாங்கு முன்னுரிமையளிக்கின்றது. இவ்கையான கற்றல் பாங்கையூடைய பயிலுனர்கள் விரிவூரைகள், இசை, ஒலிநாடாக்கள், குழுக் கலந்துரையாடல், பேசுதல் மற்றும் இணைய அரட்டை மூலம் சிறப்பான கற்றல் ஆற்றலினை வெளிப்படுத்துகின்றனர்.

Read & Write (R) வாசித்தல் – எழுதுதல்
எழுத்துக்களாகவூம் உரைகளாகவூம் தகவல்கள் பதிவூசெய்யப்படுவதுடன் இக்கற்றல் முறை அதனுடன் தொடர்புபடுகின்றது. ஆச்சரியப்படுவதற்கல்லாமல், பல கல்வியியலாளர்கள் இவ்வகையான கற்றல் பாங்கை உறுதியாகக் கொண்டிருக்கின்றனர். இது உரைப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளீடு (வாசித்தல்), பணிகள் (வாசித்தலும் எழுதுதலும்) மற்றும் வெளியீடு (எழுதுதல்) என்பனவற்றினை வலியூறுத்துகிறது.

Kinesthetic (K) அனுபவம் கூடாகக் கற்றல் 
அனுபவங்கள், உதாரணங்கள், தூண்டற் பயிற்சிகள் (உண்மையானவை அல்லது உருவகப்படுத்தப்பட்ட) மூலம் கற்றல் இடம்பெறுதலை இக்கற்றல் பாங்கு குறிக்கின்றது. ஏனைய கற்றல் பாங்குகளும் குறித்த கற்றல் பாங்குடன் ஒரே சமயத்தில் நிகழ்கின்ற போதிலும், மாணவர்களின் கற்றல் நேரில் இடம்பெறுகின்ற விடயங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. அதாவது, பிரயோகிப்பதன் மூலம் கற்றல் இடம்பெறுவதுடன் உடல், உள ரீதியான துலங்கல் கற்றல் செயன்முறையின் போது நிகழ்கின்றது.

 

1. பயிலுனரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கற்றல் பாங்குகள்?
2. குறைவாக ஆதிக்கம் செலுத்தும் கற்றல் பாங்குகள்?

குறிப்பு: கற்றல் பாற்குகள் சமமாகக் காணப்பட்டால் இந்நபர் ஒருங்கிணைந்த கற்பவராவார். (Integrated Learner)

ஆசிரியர் என்பவர், தமது அறிவை மாணவர்களுக்குப் புகட்டாது, அவர்களுக்குள்
எவ்வவகையான திறமைகள் காணப்படுகின்றன என்பதனை அவர்களே உணர்வதற்கு உதவியளிப்பவராக, வசதியளிப்பவராக இருக்கவேண்டும். மாணவர்களின் நிலைமைக்கேற்ப அவர்கள் எவ்வகையான கற்றல் பாங்குடையவர்கள் என்பதனைக் கவனத்திற்கொண்டு மாணவர்மையச் செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.

எனவே, VARK என்பது சிறப்பான கற்றலைத் தரும் ஒரு சிறந்த பாங்காகும். இது மந்திரக் கோல் அல்ல. தனிப்பட்ட ஈடுபாட்டையூம் நம்பிக்கையையூம் அதிகரிக்கும்.

  1. Fleming, N. D., & Mills, C. (1992). Not another inventory, rather a catalyst for reflection. To Improve the Academy, 11(1), 137–155. https://doi.org/10.1002/j.2334-4822.1992.tb00213.x
  2. Psyche,K. (2019). Methodology of Teaching.
  3. Kia, M. M., Iran, T., Aliapour, A., & Ghaderi, E. (2009). Study of learning styles and their roles in the academic achievement of the students of Payame Noor University. Turkish Online Journal of Distance Education, 10 (2), 24-37.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *